• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 மே மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கேகாலை மாவட்டத்தில் பெய்த கடும்மழை காரணமாக நிகழ்ந்த மண்சரிவினால் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பிரேரிப்புகள்
- 2016 மே மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கேகாலை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவு அடங்கலாக இந்த மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகப் பிரிவுகளும் பாரிய அளவில் சேதங்களுக்கு உள்ளாகின. அவ்வாறு நிகழ்ந்த மண்சரிவு காரணமாக இல்லாமற் போன மனித உயிர்கள் 151 ஆகுமென்பதோடு, 9,620 குடும்பங்களுக்குச் சொந்தமான 34,833 போ்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டனர். அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் 2016‑06‑01 ஆம் திகதியன்று கேகாலை நகர மண்டபத்தில் நடாத்தப்பட்ட விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் பொது வாழ்க்கையை துரிதமாக பழையநிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சனாதிபதி அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைவாக மேற்குறிப்பிட்ட அனர்த்த நிலைமை காரணமாக பகுதியளவில் சேதமடைந்த 1,845 வீடுகள் சம்பந்தமாக தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஊடாக இழப்பீடு மீள் நிரப்பப்படுவதோடு, முழுமையாக சேதமடைந்த 230 வீடுகள் அடங்கலாக தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் மீளக் குடியமர்த்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள 1,682 வீடுகள் சார்பில் 2,018.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் 1,682 புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கும் தங்களுடைய சொந்தக் காணிகளில் வீடுகளை நிருமாணிப்பதற்கு முனையும் வீட்டுப் பயனாளிகளுக்கு 400,000/- ரூபா வீதம் 500 பயனாளிகளுக்கு 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் மண்சரிவுக்கு ஆட்பட்டதும் ஆபத்து மிக்கதுமான இடங்களென இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்கள் குடியமர்வதற்கு தடைசெய்யப்பட்ட வலயங்களாக வெளிப்படுத்துவதற்கும் வீடுகளை நிருமாணிப்பதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பினை தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்புக்கு கையளிப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.