• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் ஜோர்ஜியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் கலந்துரையாடல்கள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
- இருநாடுகளுக்கும் இடையில் அரசியல் அதேபோன்று பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழினுட்ப சுற்றுலா மேம்பாடு மற்றும் கலாசார ஒத்துழைப்பு அடங்கலாக இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் ஜோர்ஜியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் இருதரப்பு அரசியல் கலந்துரையாடல்கள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு 2016 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் 04 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்தப்படவுள்ள வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல்களின் போது கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.