• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மொழிகளின் சமத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்கு உரியதாக இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கையில் வசிக்கும் இனங்களுக்கு இடையில் தேசிய சகவாழ்வையும் கலந்துரையாடலையும் அரசகரும மொழிகளின் மேம்பாட்டையும் நோக்காகக் கொண்டும் நாட்டில் வசிக்கும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை பேசும் மக்களின் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை விருத்தி செய்யும் நோக்குடனும் தேசிய மொழிகளின் சமத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தை 5 வருடகால கருத்திட்டமொன்றாக 2017 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கனடா அரசாங்கத்தினால் வழங்கப்படும் 11.2 மில்லியன் கனேடிய டொலர்கள் கொண்ட கொடையினை பயன்படுத்தி இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.