• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபித்தல்
- மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபிப்பது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட செயலணியினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, பெருந்தோட்ட பிரதேசங்களில் புதிய கிராமங்களை தாபிப்பதன் மூலம் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து குறித்த பிரதேசங்களின் மக்களுக்கு நேரடியாக தேசிய ஓட்டத்திற்குள் நுழைவதனை உறுதிப்படுத்துவதற்கும் அதன் மூலம் பெருந்தோட்ட மக்களை பலப்படுத்தும் நோக்கில் மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை தாபிப்பதற்கான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர். யூ.பழனி திகம்பரம் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.