• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் ஆசிய உணவு மற்றும் கமத்தொழில் வர்த்தக மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்
- ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (Asian Productivity Organization - APO) சருவதேச அமைப்பொன்றாக யப்பானை முதன்மையாகக் கொண்டு 1961 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, உறுப்பு நாடுகளின் தொழினுட்ப மற்றும் கமத்தொழில் துறைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது அதன் நோக்கமாகும். 20 ஆசிய மற்றும் பசுபிக் வலய நாடுகள் இந்த அமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ளதோடு, இலங்கையும் இதில் உறுப்பு நாடொன்றாகும். “கமத்தொழில் மற்றும் உணவு கைத்தொழிலின் வர்த்தக ரீதியிலான நிலையான தன்மை மற்றும் உயர் உற்பத்தி திறனுக்கான புதிய கண்டுபிடிப்புகள்" என்னும் தொனிப்பொருளின் கீழ் ஆசிய உணவு மற்றும் கமத்தொழில் வர்த்தக மாநாடொன்றை 2016 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகியிலிருந்து 05 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்கு இந்த அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இந்த மாநாட்டுக்கு அனுசரணை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.