• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பொலை வர்த்தக கட்டடத் தொகுதி மற்றும் துணை பாதை நிருமாணிப்பு
- கண்டி மாவட்டத்திலுள்ள கம்பொலை நகரம் 5.18 சதுர கிலோ மீற்றர்கள் கொண்ட பூமி பிரதேசத்தில் பரந்துள்ளதோடு இந்த நகர அதிகாரப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளை சிறந்த தரத்தில் வழங்குவதற்கும் நகரத்தினுள் உள்ள வாகன நெரிசலைக் குறைப்பதற்கும் கம்பொலை நகரத்தை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது நிலவும் வாகன நெரிசலைக் குறைத்து மாற்றுப் பாதையொன்றை நிருமாணிப்பதற்கும் அதற்கண்மையில் வர்த்தகக் கட்டட தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றதோடு இந்த நோக்கத்திற்காக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணித்துண்டொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.