• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகந்துர (மேற்கு) கைத்தொழிற்பேட்டையில் தாபிக்கப்படவுள்ள காப்பு நிலையம் மற்றும் தொழினுட்ப பரிமாற்றல் நிலையம்
- இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தினதும் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையினதும் கூட்டுக் கருத்திட்டமொன்றாக காப்பு நிலையமொன்றும் தொழினுட்ப பரிமாற்றல் நிலையமொன்றும் மாகந்துர (மேற்கு) கைத்தொழிற்பேட்டையில் தாபிக்கப்படவுள்ளது. இதன் மூலம் புதிய உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திகளை செய்வதற்கு தேவையான அடிப்டை வசதிகளும் வர்த்தகக் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கமைவாக 46.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் மாகந்துர (மேற்கு) கைத்தொழிற்பேட்டையில் காப்பு நிலையமொன்றையும் தொழினுட்ப பரிமாற்றல் நிலையமொன்றையும் தாபிப்பதற்கும் இதற்காக இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கும் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.