• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சியிலுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவகம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள துணை பயிற்சி நிலையங்களில் ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கலினை அமுலாக்கம் செய்தல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கேள்வியினை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பயிற்சியினை விருத்தி செய்யும் நோக்கில் "இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொழிற்பயிற்சிக் கருத்திட்டம்" ஜேர்மன் அரசாங்கத்தின் கொடை மற்றும் உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவகம் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதோடு, தேசிய தொழிற் தகைமைகளான (NVQ) 4, 5 மற்றும் 6 ஆகிய மட்டங்களின் பயிற்சிப் பாடநெறிகள் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. NVQ 1 தொடக்கம் 3 வரையிலான மட்டங்களைச் சேர்ந்த பயிற்சி பாடநெறிகளுக்கான நுழைவினை வழங்கி 15 துணைத் தொழிற்பயிற்சி நிலையங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாபிக்கப்படும். இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவகம் மற்றும் அதன் துணை பயிற்சி நிலையங்களின் மாணவர்களினது ஆங்கில மொழித்திறமையை விருத்தி செய்வதற்கான உதவியை வழங்குவதற்கு ஜேர்மனியின் Johannes Gutenberg - University Mainz பல்கலைக்கழகமும் ஜேர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமும் முன்வந்துள்ளதோடு அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.