• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய கண் வங்கியை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
- விழிவெண்படல பார்வைக் குறைபாடு பார்வையில்லாமற் போவதற்கான நான்காவது முக்கிய காரணமாகுமென உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. விழிவெண்படல மாற்று சிகிச்சை மூலம் கண்பார்வையை மீள பழையநிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் இந்த குறைபாட்டினை சுகப்படுத்தலாம். தற்போது உலகம் முழுவதும் விழிவெண்படல குறைபாடு காரணமாக பார்வையற்றோரின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்துள்ளதோடு, கேள்விக்கு ஏற்ற விழிவெண்படலம் வழங்குகை இல்லாததன் காரணமாக விழிவெண்படலக் குறைபாட்டினால் ஏற்படும் கண்பார்வை இல்லாமற் போவதை தவிர்ப்பதற்கு தேசிய கண்வங்கியானது கணிசமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தேசிய கண்வங்கி சர்வதேச மருத்துவ தரங்களுக்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழுடன் செயற்படும் இலங்கையிலுள்ள ஒரே கண்வங்கியாகும் என்பதோடு, கண் இழைம சிகிச்சையின் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு முறையை சரியாகவும் பின்பற்றுகின்றது. இலங்கை தேசிய கண்வங்கிக்குத் தேவையான தொழினுட்ப உதவிகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குவதற்காக "ஆசிய விழிவெண்படல ஆதாரமன்றம்” மற்றும் இலாபத்தை நோக்காகக் கொள்ளாத உலக சுகாதார அமைப்பொன்றான Sight Life நிறுவனம் முன்வந்துள்ளதோடு, இலங்கை தேசிய கண்வங்கியை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.