• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட சிறுவர் காவறை கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- சப்ரகமுவ மாகாணத்திலுள்ள உயர் மருத்துவ சேவைகளை வழங்கும் வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையாகுமென்பதோடு, இது ஏனைய கிட்டிய மாகாணங்களிலுள்ள நோயாளிகள் பெரும்பாலானோருக்கு சுகாதார சேவையை வழங்குகின்றது. ஆயினும், நோய்வாய்ப்படும் சிறுவர்களுக்காக இந்த வைத்தியசாலையில் தற்போது 68 படுக்கைகள் கொண்ட காவறைத் தொகுதியொன்று மாத்திரம் உள்ளது. நேரடியாக உள்வாங்கப்படும் நோயாளிகள் அதேபோன்று ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பப்படும் நோயாளிகளினாலும் எப்பொழுதும் சிறுவர் காவறை நிரம்பிக் காணப்படுகின்றது. நோயாளர்களின் சிகிச்சை சேவையின் தரத்தினை மேம்படுத்தும் தேவையையும் நோய்வாய்ப்படும் சிறுவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையின் சிறுவர் காவறையில் மேலதிகமாக 116 படுக்கைகளை சேர்க்கும் விதத்தில் இரண்டு (02) மாடிக் கட்டடமொன்றை நன்கொடையாளர்களினால் வழங்கப்படும் நிதி நன்கொடையைப் பயன்படுத்தி 70 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் நிருமாணிப்பதற்கும் ஏனைய வசதிகளை அரசாங்கத்தினால் செய்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.