• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டத்தொகுதி யொன்றை சீதுவையில் நிருமாணிப்பதற்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
- சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் சமூக பணிகள் தொடர்பிலான கல்வியினை வழங்கும் இலங்கையிலுள்ள ஒரே அரசாங்க கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினால் செய்முறைப் பயிற்சிகளும் உள்ளடக்கிய உயர்மட்ட தரம்வாய்ந்த கல்விப் பாடநெறிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்த நிறுவனத்தினால் நடாத்தப்படும் 17 முழுநேர பாடநெறிகளுக்காக கலந்து கொள்ளும் சுமார் 1500 மாணவர்களுக்காக குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட சுமார் 70,000 சதுர அடிகள் கொண்ட இடவசதிக்குள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் கற்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இந்த இடவசதிகள் கல்வி பாடநெறிகளை நடாத்துதல், அலுவலகப் பணிகளை நடாத்திச் செல்லல், ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் நலனோம்பல் வசதிகளை வழங்குதல் போன்ற பணிகளுக்கு போதுமானதாக இல்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் I ஆம் கட்டமாக சுமார் 100,000 சதுர அடி கொண்ட கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.