• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனவுயிர் முகாமைத்துவப் பிரிவுகளை தாபித்தல்
- காட்டு யானைகள் - மனிதர்கள் மோதலை குறைப்பதற்காக நீண்டகால மற்றும் நடுத்தவணை கால நடவடிக்கைகள் பல ஆரம்பிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி பயனை அடைவதற்கு கணிசமான ஒரு காலம் செல்லலாம். ஆதலால், இந்தக் காலப்பகுதிக்குள் காட்டு யானைகளினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்கும் வேலைத்திட்டமொன்று அத்தியாவசியமானதாகும். அதேபோன்று சிறுத்தை மற்றும் முதலை போன்ற விலங்கினங்களினால் மனிதர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதேபோன்று மனிதர்களினால் அத்தகைய விலங்கினங்களுக்கு ஏற்படும் சேதங்களையும் குறைப்பதற்கான வேலைத்திட்டமொன்று தேவையானதாகும். இதற்கான குறுகியகால நடவடிக்கையொன்றாக வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதல் பற்றி ஏதேனும் சம்பவமொன்று அறிக்கையிடப்பட்டதும் உரிய இடத்திற்குச் சென்று தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அத்தகைய மோதல்கள் பரவலாக அறிக்கையிடப்படும். வனவுயிர் பிரிவுகளை தழுவும் விதத்தில் "வனவுயிர் முகாமைத்துவப் பிரிவுகளை“ தாபிக்கும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இது சம்பந்தமாக பரிசீலனை செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் முன்னோடிக் கருத்திட்டமொன்றாக ஐந்து (05) வனவுயிர் முகாமைத்துவப் பிரிவுகளை துரிதமாகத் தாபிப்பதற்கும் அவற்றின் முன்னேற்றம் பற்றி ஆறு (06) மாதங்களில் ஆராந்து மீதிப் பிரிவுகளைத் தாபிப்பது பற்றி தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக பதில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர் (திருமதி) சுமேதா ஜி.ஜயசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.