• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத சேவை துறையின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் 318 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் திட்டம்
- இலங்கை புகையிரத துறையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தினால் சுமார் 966 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த கடன் வசதிகள் தெற்கு மற்றும் வடக்கு புகையிரதப் பாதைகளை மேம்படுத்துவதற்காகவும் புகையிரத என்ஜின்கள் மற்றும் டீசல் பவர் செட்டுகள் கொள்வனவு செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரதம அமைச்சர் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாட்டின் புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கு மேலும் 318 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்திருந்தார். நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களுக்கு இடையில் வினைத்திறன் மிக்க பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவையை பாதுகாத்து பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையும், அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலுமான புகையிரதப் பாதை சைகை முறைமையை விருத்தி செய்து புனரமைப்பதற்கும், குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடனான 06 டீசல் பவர் செட்டுக்களையும் 10 என்ஜின்களையும் எண்ணெய் கொண்டு செல்லும் 30 தாங்கிகளுடனான வெகன்களையும் கொள்கலன்களைக் கொண்டு செல்லும் 20 வெகன்களையும் 160 புகையிரதப் பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் தொகையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்தக் கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.