• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட்டுள்ள வர்த்தக காணிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குதல்
- அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் 30 வருட காலங்களுக்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்கும் போது பிரதான விலை மதிப்பீட்டாளரினால் வழங்கப்படும் சந்தைப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு வருடாந்த குத்தகைத் தொகையானது கணக்கிடப்படுவதோடு, 5 ஆண்டுகளுக்கு ஒருதடவை இந்த குத்தகைத் தொகையானது 50 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றது. இதன் போது பின்பற்றப்படும் வழிமுறைக்கு அமைவாக அரசாங்கக் காணிகளை வர்த்தக தொழில்முயற்சிகளுக்காக குத்தகைக்களிக்கும் போது அறவிடப்படும் குத்தகைப் பெறுமதி கூடிய பெறுமதியினை எடுப்பதன் காரணமாக விசேடமாக மகாவலி அதிகார பிரதேசத்தினுள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் முகம்கொடுக்கும் கஸ்டங்களைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசாங்கக் காணிகளை வர்த்தக தொழில்முயற்சிகளுக்காக குத்தகைக்களிக்கும் போது சலுகை அடிப்படையில் உரிய குத்தகைத் தொகையை அறவிடும் கொள்கையொன்றைத் தயாரிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.