• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் 2016‑06‑05 ஆம் திகதியன்று சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல்
- சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக வீடுகள் மற்றும் அதன் சுற்றுச் சூழலுக்கு நிகழ்ந்துள்ள சேதங்கள் அரசாங்க விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு சேதமடைந்த வீடுகள் மற்றும் அதன் சுற்றுச் சூழலுக்கு துரிதமாக நட்டஈடு வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.