• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போக்குவரத்து கருத்திட்டங்களுக்கு வசதியளிக்கும் உத்தேச கருத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து தொழினுட்ப உதவிக் கடன் பெற்றுக் கொள்ளல்
- நாட்டின் போக்குவரத்துக் கருத்திட்டங்களின் சாத்திய தகவாய்வுகளை மேற்கொள்தல், விரிவான திட்டங்கள் மற்றும் கொள்வனவு ஆவணங்களைத் தயாரித்தல் உடபட ஆரம்ப கட்டத்திலுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற உதவிகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "போக்குவரத்து கருத்திட்டங்களுக்கு வசதியளிக்கும் கருத்திட்டம்" சார்பில் 24.42 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொழினுட்ப உதவிக் கடன் தொகையொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆசிய அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்காக கலந்துரையாடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.