• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழினுட்ப, வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் நிலைய முகாமையாளர்களுக்கு சிங்கப்பூரில் நடாத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்
- திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் தொழினுட்ப, வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் நிலைய முகாமையாளர்கள் 60 பேர்களுக்காக இரண்டுவார காலம் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்தும் பொருட்டு 280,840 சிங்கப்பூர் டொலர்களைக் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள இலாபத்தை நோக்காகக் கொண்டிராத நிறுவனமொன்றாகிய Temasek Foundation என்னும் நிறுவனத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சும் இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சிங்கப்பூரில் புகழ்பெற்ற நிறுவனமொன்றான ITE Education Services நிறுவனத்துக்கும் இடையில் மாண்புமிகு பிரதம அமைச்சரின் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.