• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பலோடிகளுக்கான பயிற்சியளித்தல், உறுதிப்படுத்தல், கண்காணித்தல் (STCW 1978 - திருத்தப்பட்ட) ஒழுங்குவிதியைத் திருத்துதல்
- கப்பல்களில் சேவை புரியும் கப்பலோடிகளுக்கு சர்வதேச வணிகக் கப்பல் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக பயிற்சியளித்தல், உறுதிப்படுத்துதல். கண்காணித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இந்த தரங்கள் வணிகக் கப்பல் செயலகத்தினால் 2013‑07‑12 ஆம் திகதியிடப்பட்டதும் 1818/37 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியின் மூலம் ஒழுங்கு விதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சமுத்திர அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறும் இந்த ஒழுங்குவிதிகளை திருத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.