• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய கண்டிய நடனம் மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு பல்லேகலயில் ஶ்ரீ தலாதா மாளிகையுடன் இணைந்த ஆற்றுகைகலைகள் பயிற்சி நிறுவனமொன்றை ஆரம்பித்தல்
- மிக நீண்ட காலமாக கண்டிய நடனம் அடங்கலாக கலை அம்சங்கள் சர்வதேச ரீதியில் கவரப்பட்டுள்ளதோடு, இது இலங்கையின் அடையாளத்திற்கும் கௌரவத்திற்கும் பெருமை சேர்க்கும். கண்டிய பாரம்பரிய கலைஞர்களினால் பரம்பரை பரம்பரையாகப் பேணி பாதுகாத்துவரும் நடனக் கலையானது புதிய பரம்பரையினரிடத்தில் படிப்படியாக குறைவடைந்து வரும் போக்கு உருவாகியுள்ளதோடு, நடனக் கலைஞர்களின் பற்றாக்குறையும்கூட உருவாகி வருகின்றது. இந்த நிலைமையைத் தவிர்த்து கண்டிய நடனக் கலையைப் பாதுகாத்து அதன் அடையாளத்தையும் கலாசாரப் பண்புகளையும் பேணி நடாத்திச் செல்லும் பொருட்டு நடனக் கலைஞர்களை ஊக்குவித்தல், பயிற்சியளித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் இந்த கலைகள் சார்ந்த வாழ்வாதார வழிவகைகளை உருவாக்குதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு பாரம்பரிய கண்டிய நடனத்தையும் கலாசார மரபுரிமைகளையும் பாதுகாப்பதற்குமான ஆற்றுகைகலைகள் பயிற்சி நிறுவனமொன்றை ஆரம்பிக்கும் பொருட்டிலான பிரேரிப்பொன்று ஶ்ரீ தலதா மாளிகையி்ன் தியவடன நிலமே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 120 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கமும் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பாரம்பரிய கண்டிய நடனம் மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு பல்லேகலயில் ஶ்ரீ தலாதா மாளிகையுடன் இணைந்த ஆற்றுகைகலைகள் பயிற்சி நிறுவனமொன்றை சர்வதேச பௌத்த நிலைய மனையிடத்தில் ஆரம்பிக்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.