• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கரைவலை மீன்பிடித் தொழிலை ஒழுங்குறுத்துதல்
- 1950 களில் கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த கரைவலை மீன்பிடித்தொழிலின் மூலம் தேசிய மீன் உற்பத்திக்கு வழங்கப்பட்ட பங்களிப்பு சுமார் 40 சதவீதமாக இருந்தபோதிலும் தற்போது இந்தப் பங்களிப்பானது பல்வேறுபட்ட காரணங்களினால் குறைவடைந்துள்ளது. கடல் கொந்தளிப்பில்லாத காலப்பகுதியில் செயற்படுத்தப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு ஆள்வலு அதிகமாக தேவைப்படுவதோடு, அதன்மூலம் காரையோரங்களில் வசிப்பவர்களுக்கு தொழில் வாய்ப்பும் உருவாக்கப்படுகின்றது. ஆயினும், பிடிக்கப்படவேண்டிய மீன்களை தெரிவு செய்யாமல், மீன்களின் அளவினைக் கருத்தில் கொள்ளாது சகல மீன் வகைகளையும் வலைகொண்டு பிடிக்கப்படுவதனால் இந்த முறை சுற்றாடல் நட்புறவுமிக்க முறையொன்றாகக் கருதப்படுவதில்லை. 1984 ஆம் ஆண்டில் கரைவலை தொழிலுக்குரியதாக ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டதோடு, காலத்தின் தேவைக்கேற்ப அவற்றை மீளாய்வு செய்யும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக கரைவலை மீண்பிடித்தொழில் தற்போது முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு மாற்றுவழிகளை பிரேரிக்கும் பொருட்டு ஆழமாக ஆராய்ந்து நிலைபேறுடைய கரைவலை மீன்பிடித்தொழிலின் பொருட்டு சிபாரிசுகளைக் கொண்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.