• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆனமடுவையிலுள்ள தொழினுட்ப கல்லூரியை இடம் நகர்த்துதலும் மேம்படுத்துதலும்
- “கம் உதாவ" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட கட்டடங்கள் சிலவற்றில் மிகவும் வரையறுக்கப்பட்ட வசதிகளின் கீழ் 1993 ஆம் ஆண்டில் ஆனமடுவ தொழினுட்பக் கல்லூரி தாபிக்கப்பட்டது. தற்போது இந்த தொழினுட்பக் கல்லூரியின் மூலம் தேசிய தொழிற்தகைமை மட்டங்கலான (NVQ) 3, 4 மற்றும் 5 என்பவற்றின் கீழ் 13 பயிற்சி பாடநெறிகள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இந்த பாடநெறிகளைக் கற்பதற்காக வருடாந்தம் சுமார் 250 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கு பாடநெறிகளை கற்பதற்காக கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கிரமமாக அதிகரித்து வருகின்றமை காணக்கிடைக்கின்ற போதிலும் பாடநெறிகளை நடாத்துவதற்குப் போதுமான வகுப்பறைகள், செய்முறைகளில் ஈடுபடக்கூடிய இடங்கள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததன் காரணமாக கூடிய அளவு மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு இயலாமற் போயுள்ளது. ஆதலால், ஆடுமடுவை மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சி வாய்புக்களை ஏற்பாடு செய்யும் பொருட்டு இந்த தொழினுட்ப கல்லூரியை தேவையான வசதிகளுடன் வேறு இடமொன்றில் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிலாபம் - நவகத்தேகம பிரதான பாதைக்கு அண்மையிலுள்ள வடக்காரவெவ பிரதேசத்திலுள்ள 4 ஏக்கர் காணியில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஆனமடுவ தொழினுட்ப கல்லூரியை மீண்டும் தாபிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.