• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் (கட்டம் 2)
- அநுராதபுர மாவட்டத்தில் கிராமிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களில் சுமார் 85 சதவீதமானவர்கள் பாதுகாப்பற்ற நீர்வளங்களிலிருந்து குடிநீர் பெற்றுக் கொள்கின்றனர். இதன் காரணமாக முக்கியமாக இனங்காணப்படாத நீண்டகால சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது அநுராதபுர மாவட்டத்தின் கிராமிய பிரதேசங்களில் அதிகரித்து காணப்படுகின்றது. இத்தகைய நோயாளிகள் அதேபோன்று அவர்களில் தங்கி வாழ்வோரும் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். ஆதலால், இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு குழாய்நீர் வசதிகளை ஏற்பாடு செய்து சுத்தமான குடிநீர் வழங்குவது அத்தியாவசிய விடயமொன்றாக மாறியுள்ளது. இதற்கமைவாக அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் (கட்டம் 2) கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வாஹல்கட நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் சுகாதாரமற்ற நிலக்கீழ் நீர் விநியோகத்தின் மீதுள்ள பதவிய, கெபித்திகொல்லாவ, ஹொரவ்பத்தான, கஹட்டகஸ்திகிலிய ஆகிய அநுராதபுரம் மாவட்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக 23,137 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட (அண்ணளவாக 32,169 மில்லியன் ரூபா) சலுகைக் கடன் ஒன்றை வழங்குவதற்கு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.