• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மதியுரைக் கம்பனியொன்றைத் தாபிக்கும் பொருட்டு இலங்கை முதலீட்டுச் சபைக்கும் சிங்கப்பூர் Surbana Jurong தனியார் கம்பனிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கையில் முதலீட்டு ஆற்றல் பற்றி சரியாக மதிப்பிட்டு இலங்கையை கவர்ந்திழுக்கும் முதலீட்டு மையநிலையமொன்றாக மாற்றும் பொருட்டு உயர்மட்ட முதலீட்டாளர்களைக் கவரும் கடும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு உச்ச நலனை பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான மதியுரைக் கம்பனியொன்றை தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இத்தகைய மதியுரைக் கம்பனியொன்றை தாபிப்பதற்காக நகர திட்டமிடல் மற்றும் நிருமாணிப்பு, அபிவிருத்தி முகாமைத்துவம், கட்டடக்கலை, ஆகுசெலவு மற்றும் ஒப்பந்த முகாமைத்துவம், கருத்திட்ட முகாமைத்துவம், வசதிகள் முகாமைத்துவம் போன்ற பரந்த துறைகளில் வியாபித்த சேவைகளை வழங்கும் உலக அங்கீகாரம் பெற்ற நகர மீள் அபிவிருத்தி மதியுரைக் கம்பனியொன்றான சிங்கப்பூர் Surbana Jurong தனியார் கம்பனிக்கும் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.