• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் - 2016
- வருடாந்த பேருந்துக் கட்டணத்தை திருத்துவதற்காக அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டிய புதிய தகுதிவிதிகள் இருப்பின் அவற்றையும் உள்ளடக்கி 2002 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்தைத் திருத்தும் கொள்கைகளையும் தகுதிவிதிகளையும் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளினதும் பயணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளினதும் கருத்துக்கள் மற்றும் பிரேரிப்புக்களை பெற்றுக் கொண்டு அதன் சிபாரிசுகளைச் சமர்ப்பித்துள்ளது. சிறந்த பொது போக்குவரத்து சேவையொன்றை நடாத்திச் செல்லும் நோக்கில் இந்தக் குழுவினால் 6 சதவீதம் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட பேருந்துக் கட்டண அதிகரிப்பொன்றை வழங்குவதற்கு சிபாரிசு செய்துள்ளதோடு, அது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளமையினால் குறித்த பேருந்துக் கட்டண அதிகரிப்பை 2016 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.