• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி வலதுகரை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்தல்
- களனி வலதுகரை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு 180,000 கன மீற்றர் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை புதிதாக நிருமாணித்தல், சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகிக்கும் பிரதான குழாய்களைப் பதித்தல், 25 கிலோ மீற்றர் நீளமான நீர் அனுப்பீட்டுப் பாதையொன்றை அமைத்தல், வீ ஓயா நீர்த்தேக்கத்தை நிருமாணித்தல் மற்றும் உவர்நீர் தடுப்பாக இறப்பர் பலூன்களை உற்பத்தி செய்தல், தாபித்தல் என்பன உள்வாங்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உள்நாட்டு வங்கி ஒன்றின் ஊடாகப் பெற்றுக் கொள்ளும் 13 மில்லியன் யூரோக்களுக்குச் சமமான பெறுமதி மிக்கதும் இலங்கை நாணயத்தில் 10 மில்லியன் ரூபா வரையிலான கடன் வசதிகளையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு திறைசேரிப் பிணையொன்றை வழங்குவதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.