• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரையாண்டு அரசிறை நிதி நிலைமை பற்றிய அறிக்கை - 2016
- 2003 ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 10 ஆம் பிரிவுக்கு அமைவாக அரையாண்டு அரசிறை நிதிநிலைமை சம்பந்தமான அறிக்கை நிதி அமைச்சரினால் உரிய ஆண்டின் யூன் மாதம் இறுதிக்குள் பொது மக்கள் அறிந்து கொள்வதற்காகவும் அதன்பின்னர் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அரசிறை நிதி நிலைமை பற்றிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, இந்த அறிக்கையிலுள்ள ஏனைய தகவல்களில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன:

* பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் 2015 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டினுள் பதிவு செய்யப்படட்ட 4.4 சதவீதமான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 5.5 சதவீதமான பொருளாதார வளர்ச்சி எய்தப்பட்டுள்ளமை.

* கலந்தாய்வு செய்யப்பட்ட காலப்பகுதிக்குரியதாக 2015 ஆம் ஆண்டில் பெற்ற அரசாங்க இறைவரியானது 2016 ஆம் ஆண்டில் 19.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை.

* பணவீக்கம் தொடர்ந்தும் தனி இலக்கத்தில் பேணுவதற்கு இயலுமாகியுள்ளமை.

* சர்வதேச சந்தையின் நிலையற்ற தன்மையிலும் மொத்த ஏற்றுமதி வருமானம் 4.5 சதவீதத்தால் குறைவடைந்தாலும் வௌிநாட்டு தொழிலாளர்களின் அனுப்பீடு மற்றும் சுற்றுலாத் தொழிலின் வருமானம் என்பவற்றின் மூலம் வௌிநாட்டு நாணய ஓட்டம் அதிகரித்துள்ளதனாலும், உணவுப் பொருட்கள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் போன்றவற்றின் இறக்குமதி செலவு கணிசமான அளவு குறைவடைந்துள்ளதன் காரணமாகவும் 2015 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது வர்த்தகப் பற்றாக்குறையானது 2016 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 2.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை.