• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டிஜிட்டல் வர்த்தகத்திற்காக கொடுப்பனவுகளை செய்யும் தேசிய வழிமுறை யொன்றைத் தாபித்தலும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துதலும்
- நடைமுறையில் பொது மக்களினால் பொருட்கள் மற்றும் சேவைகள் பெற்றுக் கொள்ளும் போது பயன்படுத்தப்படும் மிக எளிமையான வழிமுறையாவது வீசா, மாஸ்ரக்காட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற சர்வதேச கடன் அட்டைகளை பயன்படுத்துவதாகும். எவ்வாறாயினும் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் போது அறவிடப்படும் கட்டண முறைகள் அடங்கலாக பல்வேறுபட்ட காரணங்களினால் இலங்கையில் இந்த அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளைச் செய்வது இதுவரை காலமும் குறைந்த மட்டத்தில் நிலவுகின்றது. கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி அதிகரிப்பதன் மேல் உரிய காட் முறையினால் அறவிடப்படும் கட்டணமும் அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மதுவரித் திணைக்களம் அடங்கலாக அரசாங்க நிறுவனங்கள் அதேபோன்று ஏனைய வர்த்தகர்களும் இத்தகைய அட்டைகளை உபயோகப்படுத்துவதற்கு அக்கறை கொள்வதில்லை. இது சம்பந்தமாக நிதி அமைச்சினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் செய்யப்பட்ட சிபாரிசுகளை ஆராய்ந்து உரிய துறைகளில் தேர்ச்சிமிக்க சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவினால் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கையில் அரசாங்க நிறுவனங்கள், தொழில்முயற்சிகள், பிரசைகள் சார்பில் டிஜிட்டல் வர்த்தக நடவடிக்கைகளின் போதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் போதும் வசதிகளைச் செய்யும் பொருட்டிலான வழிமுறையொன்றாக "தேசிய கொடுப்பனவு மேடை” (National Payment Platform) என்பதனை தாபிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.