• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர, சப்பிரகமுவ, யாழ்ப்பாணம், களனி, கொழும்பு, பேராதனை, ஊவா வெல்லஸ்ஸ, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- பல்வேறுபட்ட பாடநெறிகளின் கீழ் பட்டபாடநெறிகளை கற்கும் பொருட்டு உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கையை வருடாந்தம் 5 சதவீதத்தால் அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அவ்வாறு அதிகரிக்கும் எண்ணிக்கைக்கமைய வசதிகளை செய்வதற்கு ஶ்ரீ ஜயவர்த்தனபுர, சப்பிரகமுவ, யாழ்ப்பாணம், களனி, கொழும்பு, பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களின் பொது உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஊவா வெல்லஸ்ஸ, சப்பிரகமுவ, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் தொழினுட்ப பீடத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்குமான பணிகளை 2016 ஆம் ஆண்டில் அதற்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள 1369 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டைப் பயன்படுத்தி ஆரம்பிப்பதற்கும் 2017 ஆம் 2018 ஆம் ஆண்டுகளில் அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பொது திறைசேரியிலிருந்து குறித்தொதுக்குவதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.