• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்கு மாகாணத்தில் நிலாவெளியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் தொழிற்பயிற்சியை நோக்காகக் கொண்டு பல்வேறுபட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் செயல்முறை செயல் அமர்வுகளும் நடைமுறைப்படுத்தப் படுவதோடு, அவை இந்த திணைக்களத்திற்குச் சொந்தமான பயிற்சி நிலையங்களிலும் பொரளையிலுள்ள கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆயினும், திணைக்களத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியிருக்கும் பயனாளிகளுக்காக நடாத்தப்படும் பயிற்சி செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் கொழும்பில் நடாத்துவதற்குத் நேரிட்டுள்ளமையினால், அதில் கலந்து கொள்வதில் அவர்கள் பல்வேறுபட்ட நடைமுறை பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோடு, அவர்களுக்கு வதிவிட வசதிகளை வழங்கும் போது திணைக்களமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. ஆதலால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் திவிநெகும பயனாளிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்காக பயிற்சி நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி, கோபாலபுரம், பிரதேசத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலைய கட்டடத்தை அரசாங்க விலைமதிப்பீட்டாளரின் பெறுமதியான 126 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.