• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றத்தின் பின்னர் குறித்த உடைமை மாற்றலை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதம் சார்பில் விண்ணப்பதாரர்களுக்கு சலுகைக் காலமொன்றையும் சலுகைக் கட்டணமுறையொன்றையும் அறிமுகப்படுத்துதல்
- பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் மாற்றமடைந்து பலகாலம் கடந்தும் வாகனங்களின் உடைமை மாற்றத்தைப் பதிவு செய்யாமல் ஆரம்ப உரிமையாளரின் பெயரிலேயே பயன்படுத்துதல், திறந்த உடைமை மாற்றல் ஆவணங்களின் மீது பல்வேறுபட்ட ஆட்களுக்கு இடையில் வாகனங்கள் கைமாற்றுதல் போன்றவை காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய உடைமை மாற்றல் கட்டணம் அடங்கலாக பாரிய அளவிலான வருமானமும் இல்லாமற் போவதோடு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கும் இதன் காரணமாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. இந்தப் போக்கினை குறைக்கும் நோக்கில் 2011 ஆம் ஆண்டில் வௌிப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் (கட்டணம்) கட்டளைகள் மூலம் தாமதக்கட்டண முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடியாமற்போயுள்ளது. ஆதலால், உடைமை மாற்றப்பட்டுள்ளபோதிலும் உரிய காலப் பகுதிக்குள் உடைமை மாற்றத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்படாத வாகனங்கள் சார்பில் உடைமை மாற்றத்தைப் பதிவு செய்யும் பொருட்டு மூன்று (03) மாதங்களைக் கொண்ட சலுகைக் காலமொன்றையும் அங்கு செலுத்தப்பட வேண்டிய மேலதிகக் கட்டணம் சம்பந்தமாக சலுகையொன்றையும் வழங்குவதன் மூலம் குறித்த வாகனங்களின் உடைமை மாற்றலை பதிவு செய்வதனை ஊக்குவிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.