• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான நிலைபேறுடைய அபிவிருத்தி சட்டம்
- நிலைபேறுடைய அபிவிருத்தி தொடர்பிலான இலங்கையின் தேசிய கொள்கையையும் திறமுறையையும் மேம்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்து வதற்கும் நிலைபேறுடைய அபிவிருத்தி சபையை நிறுவுவதற்கும் அதற்குரிய ஏனைய விடயங்களை ஏற்பாடு செய்வதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான நிலைபேறுடைய அபிவிருத்தி சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் உரிய ஏனைய நியதிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் அங்கீாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.