• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலாசார நடவடிக்கைகளின் போது ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டு 35 கொம்பன் யானைகளையும் / ஏனைய யானைகளையும் கொண்ட சேர்மமொன்றை மிருககாட்சிசாலைகள் திணைக்களத்தின் கீழ் பேணுதல்
- இலங்கையில் பெரஹாராக்கள் பௌத்த கலாசார விழுமியங்களுக்கு உரிமை கோருவதோடு, முக்கியமாக கண்டி தலதா பெரஹாரா போன்ற பெரஹாராக்களுக்கு முழுஉலகத்தினதும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பெரஹாரா ஒன்றின் அழகு அதேபோன்று ஆளுமை மற்றும் வந்தனைக்குரியதென பேணுவதற்கு யானைகளின் பங்களிப்பு அத்தியாவசியமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. கண்டி தலதா பெரஹாரா மற்றும் பிற பிரசித்தப் பெரஹாராக்கள் ஒரே காலப்பகுதியில் வரும் சந்தர்ப்பங்களில் தற்போதுள்ள யானைகள் குறித்த பெரஹாராக்களில் பங்குகொள்ளச் செய்வதற்குப் போதுமான எண்ணிக்கையில் கிடைப்பதில்லை. அதேபோன்று மதம்பிடித்தல், முதுமையடைதல் போன்ற காரணங்களினாலும் தற்போதுள்ள சகல யானைகளையும் பெரஹாராக்களில் பங்குகொள்ளச் செய்வதில் கடினமான நிலைமை காணப்படுகின்றது. இதற்கமைவாக பெரஹாரப் பணிகளுக்கு ஏற்ற விதத்தில் பயிற்றுவிக்கும் நோக்கில் பின்னவல யானை சரணாலயத்திலிருந்தும் அத்துடன் தேவையான சந்தர்ப்பங்களில் உடவளவை யானைகள் காப்பகத்திலிருந்தும் கொண்டுவரப்படும் கொம்பன் யானைகளையும் / ஏனைய யானைகளையும் பயன்படுத்தி ஆகக்கூடுதலாக 35 வரையிலான பழக்கப்படுத்திய யானைகள் சேர்மமொன்றை உருவாக்கி மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பிரிவொன்றாக நடநாத்திச் செல்லும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.