• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கதுறுவெலை நகர விரிவுபடுத்தல் கருத்திட்டம் - கட்டம் I
- மோதல்நிலைமை முடிவடைந்தவுடன் கதுறுவெலை பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதோடு, அதன் பெறுபேறாக கதுறுவெலை நகரத்திற்குள் வாகன நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போதாமை போன்ற காரணங்களும் அதேபோன்று முறையான திட்டமின்றி மேற்கொள்ளப்படும் நிருமாணிப்புகளினால் சுற்றாடல் மற்றும் சமூக ரீதியிலான பிரச்சினைகள் பலவும் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அவற்றுக்கு மாற்றுவழியாக கதுறுவெலை நகரத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டமானது நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் பல கருத்திட்டங்கள் நடைமுறைப்ப படுத்தப்படவுள்ளன. இதற்கமைவாக, இந்த கருத்திட்டங்களின் முதலாம் கட்டத்திற்குரிய திட்டமிடல் பணிகள், காணி அபிவிருத்திப் பணிகள், கால்வாய்முறைமைகளை அமைத்தல், மண்நிரப்புதல் போன்ற பணிகள் இலங்கை காணிமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.