• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வொஷிங்டன் டீ. சி. யில் உள்ள இலங்கை தூதரகத்தின் பழைய பதிவேட்டக கட்டடத்தை குத்தகைக்கு விடுதல்
- ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் இலங்கைத் தூதரகத்தின் அலுவலகப் பணிகள் இதற்கு முன்னர் நடாத்திச் செல்லப்பட்ட வொஷிங்டன் டீ. சி. யில் உள்ள இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடம் தற்போது ஒருவரும் பயன்படுத்தாமையினால், இந்தக் கட்டடம் இலங்கை அரசாங்கத்திற்குப் பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கட்டடத்தை குத்தகைக்களித்தல் / வாடகைக்கு விடுதல் சம்பந்தமான நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கலந்துரையாடும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவரின் தலைமைத்துவத்தின் கீழ் தொழினுட்ப மதிப்பீட்டுக்குழுவொன்றை நியமித்து இந்த கட்டடத்தை குத்தகைக்களிப்பதற்கு / வாடகைக்கு விடுவதற்கு உரிய தொடர் நடவடிக்கைகளைச் செய்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.