• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்புபட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 2016: கடந்த காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான கிராமங்களிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கும் மீளத் திரும்பிய அகதிகளுக்குமாக அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் முன்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த பிரதேசங்கள் சார்பில் 2016 ஆம் ஆண்டிற்குள் மீள் குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 14 பில்லியன் ரூபாவைக் கொண்ட விசேட வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடொன்று 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளின் மூலம் ஒதுக்கப்பட்டது. இதற்கமைவாக, புதிய வீடுகளை நிருமாணித்தல் பகுதியளவு சேதமடைந்த வீடுகளின் திருத்த வேலைகள், துப்புரவேற்பாட்டு வசதிகளைச் செய்தல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், இடம்நகர்த்தல் நிகழ்ச்சித்திட்டங்கள், மீளக் குடியமர்த்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் மீள வருகைதந்த அகதிகள் சார்பில் வாழ்வாதார உதவிகளை ஏற்பாடு செய்தல், வீதிகளைத் திருத்துதல், மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்புதல் அடங்கலாக மக்கள் வாழ்க்கைக்கு முக்கியமான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பல உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களினதும் மீள வருகைதந்த அகதிகளினதும் நலனின் பொருட்டு 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளின் கீழ் இந்த அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ளமை பற்றி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.