• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண மாநகர வலயத்திற்குள் மழைநீர் வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை விருத்தி செய்தல்
- மேல் மாகாணம் நாட்டின் மொத்த நில பிரதேசத்தின் சுமார் 5.7 சதவீதமாக இருந்தாலும் அது மொத்தத் தேறிய உற்பத்திக்கு 50 சதவீத்திற்கு மேலான பங்களிப்பை வழங்குகின்றதோடு, இலங்கையின் மிகமுக்கிய கைத்தொழில், வர்த்தக மற்றும் நிருவாக கேந்திர நிலையமாகும். களுகங்கை, களனி கங்கை போன்ற இலங்கையிலுள்ள பிரதான ஐந்து ஆற்றுப்படுக்கைகள் மேல் மாகாணத்தில் உள்ளதோடு, இதன் காரணமாக அடிக்கடி நிகழும் வெள்ளப்பெருக்கு அபாயத்தை குறைப்பதற்காக தற்போது நிலவும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் மேல் மாகாண மாநகர வலயத்தை சருவதேச தரங்களுக்கு அமைவாக மாநகரமொன்றாக மாற்றுவது மிக முக்கியமானதாகும். வேறஸ் கங்கை மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு கருத்திட்டத்தின் பணிகளில் 30 சதவீதம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. மேல் மாகாணத்தில் வௌ்ளப்பெருக்கு அபாயத்துடனான வலயங்களில் வௌ்ளப்பெருக்கு பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை கண்டறியும் நோக்கில் மழைநீரை கடலுக்கு வழிந்தோடும் அளவினை விருத்தி செய்வதற்காக இரண்டு சிறிய நிலக்கீழ் குகைகளை நிருமாணித்தல் மழைநீரை கடலுக்கு இறைக்கும் இரண்டு நிலையங்களை நிருமாணித்தல் அடங்கலாக எட்டு கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.