• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய சுதேச மருத்துவ ஆராய்ச்சி வைத்தியசாலை மற்றும் மூலிகைத் தோட்டத்தினை நிருமாணித்தல்
- கணிசமான அளவு இலங்கையர்கள் ஆயுள்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தற்போது அக்கறை செலுத்துவது காணக்கிடைக்கின்றது. பாரம்பரிய சுதேச மருத்துவ முறை தற்காலத்திற்கும் அதேபோன்று எதிர்கால சந்ததியினருக்கும் உரித்தாக்க வேண்டிய சிறந்த மருத்துவ முறையொன்றாகையினால் அதன் பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் ஆவன செய்யப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக தொம்பே பிரதேச செயலகப் பிரிவிலுள்ள "வெதகம" மாதிரி கிராமத்திற்கு அருகாமையில் பாரம்பரிய சுதேச மருத்துவ ஆராய்ச்சி வைத்தியசாலை மற்றும் மூலிகைத் தோட்டத்தினை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.