• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“E-Motoring” கருத்திட்டம் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு மின்னணு கோவை முகாமைத்துவ முறையொன்றைத் தயாரித்துக் கொள்தல், தற்போது நடைமுறையிலுள்ள வாகனப் பதிவு செய்யும் முறைமை மற்றும் தரவு முறைமை ஆகியவற்றை விருத்தி செய்தல், தொடர்பாடல் வலையமைப்பை விருத்தி செய்தல் போன்ற முக்கியமான மூன்று (03) அம்சங்களின் கீழ் மேற்போந்த கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த “E-Motoring” கருத்திட்டத்தை நிருமாணித்து செயற்படுத்தி கையளிக்கும் கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.