• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூக பாதுகாப்பு வலையமைப்புக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
- பல்வேறுபட்ட அமைச்சுகளினால் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "திவிநெகும" போன்ற சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் பல்வேறுபட்ட நிவாரண நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக குறித்த சமூக பாதுகாப்பு முறைகளின் நன்மைகள் அதன் நன்மைகள் கிடைக்க வேண்டிய மக்கள் பிரிவுக்கு கிடைக்கப்படுகின்றதை உறுதி செய்துகொள்ளக்கூடிய வழிமுறையொன்று தாபிக்கப்படவில்லை. வறிய மக்களை பயனுள்ள வகையில் பொருளாதார செயற்பாட்டில் இணைத்துக் கொள்ளல் அதேபோன்று முதியோர்களின் தொகை துரிதமாக அதிகரித்தல் நாட்டின் சமூக பாதுகாப்புத் துறை முகங்கொடுக்கும் பாரிய சவால்களாகும். வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பயனுள்ள நலன்களை வழங்கும், பயனாளிகளாக பொருத்தமானவர்களை மாத்திரம் தெரிவு செய்யக்கூடிய தெட்டத்தெளிவான தெரிவு செய்யும் வழிமுறையை உருவாக்கி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சகல நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பினை கட்டியெழுப்பும் விதத்தில் "சமூக பாதுகாப்பு வலயமைப்பு கருத்திட்டம்" என்னும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.