• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய வீடமைப்புக் குழுக்களைத் தாபித்தல்
- “செமட்ட செவன" தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் அடங்கலாக நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் சகல வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் வெற்றிகரமாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நாட்டின் சகல மாவட்டங்களையும் முதன்மையாகக் கொண்டு "மாவட்ட வீடமைப்புக் குழுக்கள்" , பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, “பிரதேச வீடமைப்புக் குழுக்கள்" மற்றும் கிராமிய மட்டத்தில் "கிராமிய வீடமைப்பு குழுக்கள்" ஆகியவற்றை தாபித்து வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினதும் கண்காணிப்பின் கீழ் உரிய ஏனைய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் ஒத்தாசையுடன் நடைமுறைப் படுத்தப்படுமென வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனததிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.