• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்தினால் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடி படகு, மீன்பெட்டி மற்றும் தரையிறக்கும் உபகரணங்கள் அடங்கலாக பைபர்கிளாஸ் மீன்பிடி கருவிகளை கொள்வனவு செய்தல்
- நாட்டின் மீன்பிடித்தொழிலின் அபிவிருத்திக்குத் தேவையான கருவிகளை வழங்குவது கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் முக்கிய பணியொன்றாகுமென்பதோடு, கடற்றொழில் கருவிகளின் அதிகவிலை காரணமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாதவர்களை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்துதல், வினைத்திறன் மிக்க, பயனுள்ள மற்றும் சுற்றாடல் நட்புறவு மிக்க பண்ணை முறைகளை அறிமுகப்படுத்துதல், பாதுகாப்பான படகுகள் மற்றும் உயிர்காப்பு உபகரணங்கள் வழங்குதல், கடலில் நிகழும் விபத்துக்களைக் குறைத்தல், அறுவடையின் பின்னரான விரையங்களைக் குறைத்தல் என்பன இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பனியொன்றான வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்தினால் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகுகள், மீன்பிடி கருவிகள், பின் அறுவடை தொழினுட்ப உபகரணங்கள் அடங்கலாக பல்வேறுபட்ட உற்பத்திகளைச் செய்து வருகின்றதோடு அரசாங்கம் இதற்காக பாரிய முதலீட்டினை செய்துள்ளது. இதற்கமைவாக, கடற்றொழிலுக்கு புதிய தொழினுட்பத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சினாலும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கும் பொருட்டு ஏனைய அரசாங்க நிறுவனங்களினாலும் கொள்வனவு செய்யும் மீன்பிடி படகுகள், மீன்பிடி கருவிகள் மற்றும் உபகரணங்களை வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்திடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.