• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல் மற்றும் தரையிறக்கும் மீன்களின் தரத்தை அதிகரிப்பதற்குமாக தேசிய கப்பல் முறைமையை விருத்தி செய்தல்
- மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் தனிவேறான பொருளாதார வலயத்திற்குள் ஆழ் கடலில் உள்ள கடல் வளத்திலிருந்து உச்ச பயனைப் பெறுவதற்கு இலங்கைக்கு இதுவரை இயலாமற்போயுள்ளது. தற்போது பலநாள் மீன்பிடி கப்பல்கள் சுமார் 4,000 இலங்கைக்கு சொந்தமாக இருந்த போதிலும் இதில் பெரும்பாலானவை நீளத்தில் 30-40 அடி வரையில் சிறிய பலநாள் மீன்பிடி கப்பல்களாக இருப்பதும் இதன்காரணமாக அவற்றுக்கு செல்லக்கூடிய தூதரத்தின் அளவு செயற்பாட்டு கால எல்லையும் களஞ்சிய வசதியும் குறைந்த மட்டத்தில் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாய் அமைந்துள்ளது. இதற்கமைவாக, இலங்கையின் தனிவேறான பொருளாதார வலயத்தின் ஆழ்கடலிலும் சருவதேச கடலிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல் முறைமையை மேம்படுத்தும் நோக்கில் கூடிய திறன்கொண்ட 55 அடி நீளமான நவீன 10 மீன்பிடி கப்பல்களை 50 சதவீதம் அரசாங்க அனுசரணையுடன் மீனவர்களுக்கு வழங்குவதற்கும் தனிவேறான பொருளாதார வலயத்தின் செயற்பாடுகளில் ஈடுபடும் 50 கப்பல்களையும் சருவதேச கடலில் பயன்படுத்தப்படும் 50 கப்பல்களையும் சீனோர் நிறுவனத்தின் உதவியுடன் தேவையான நவீன உபகரணங்களுடன் அபிவிருத்தி செய்வதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.