• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் செக் குடியரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை
- ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடொன்றான செக் குடியரசு அபிவிருத்தியடைந்த சந்தை பொருளாதாரத்துடனான உயர் கைத்தொழில் மயமான நாடொன்றாகும். தற்போது இலங்கையினால் செக் குடியரசுக்கு செய்யப்படும் ஆடை மற்றும் தேயிலை உட்பட ஏற்றுமதிகளின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகுமென்பதோடு, இலங்கையினால் சுமார் 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட இறக்குமதி செக் குடியரசிலிருந்து வருடாந்தம் செய்யப்படுகின்றது. இதற்கமைவாக இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தல், இருநாடுகளினதும் பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை இனங்காணுதல், இருநாடுகளினதும் தொழில்முயற்சி நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தி கிட்டிய வர்த்தக, தொழினுட்ப ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் போன்று நோக்கங்களின் அடிப்படையில் பரஸ்பர ஒத்துழைப்பு சம்பந்தமான இலங்கையின் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் செக் குடியரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்காக அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.