• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பனை அபிவிருத்தி சபையின் கீழுள்ள திக்கம் வடிசாலையை மீள செயற்படுத்தல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கலாசாரத்துடன் பிணைந்துள்ளதும் பொருளாதார ரீதியில் பயன் நிறைந்ததுமான பனை மரத்திலிருந்து தற்போது உச்ச பயன் பெறப்படுவதில்லை. கள்ளு கிடைக்கும் காலப்பகுதியிலும் கூட போதுமான வசதிகள் இல்லாததன் காரணமாக கள்ளு சீவுவது குறைவடைந்துள்ளது. வட மாகாணத்தின் பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களைச் ​சேர்ந்த சுமார் 7,500 உறுப்பினர்கள் கள்ளு சீவும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக கள்ளு மூலம் தரம் மிக்க மதுசாரம் உட்பட பிற உற்பத்திகளை தயாரிப்பதற்காக திக்கம் வடிசாலையானது 1984 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, கள்ளு சீவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மக்களினதும் கள்ளு கைத்தொழிலின் மீது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்தும் மக்களினதும் வாழ்க்கை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 112.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் நவீன இயந்திர சாதனங்களை பயன்படுத்தி திக்கம் வடிசாலையை புனரமைத்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.