• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்குரிய செயற்பாட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சு ஏனைய தரப்பினர்களின் ஒத்தாசையுடன் தயாரிக்கப்பட்ட இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்குரிய செயற்பாட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொருட்டும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி ஆலோசனை சபையொன்றையும் அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு சபையொன்றையும் தாபிப்பதற்கும் 2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையை மீளமைப்பதற்கும் இந்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயைபுள்ள ஏனைய வரிசை அமைச்சுகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழிகாட்டுவதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.