• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் வர்த்தக, பொருளாதார, தொழினுட்ப உறவுகளை பலப்படுத்துவதற்காக புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்தல், பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், தகவல் பரிமாற்றம், வர்த்தக பிணக்குகளைத் தீர்த்தல், வர்த்தக செயற்பாடுகளை இலகுபடுத்தல், வர்த்தக ஒத்துழைப்புக்கான பல்வேறுபட்ட துறைகளை இனங்காணுதல் போன்ற நோக்கத்துடன் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சம்பந்தமான அரசாங்கங்களுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவை தாபிப்பது தொடர்பில் இலங்கைக்கும் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் உக்ரேன் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.