• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமையை (NVQ) அங்கீகரித்தல்
- பெரும்பாலான நாடுகளில் தேசிய தகைமை கட்டமைப்பொன்று வகுத்தமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதோடு, அதன் மூலம் மாணவர்கள் கற்கும் எல்லை மற்றும் அவர்களினால் எய்தப்படும் தகைமைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. இலங்கையில் இரண்டு தேசிய தகைமை கட்டமைப்புகள் உள்ளன. அதாவது, உயர் கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் தகைமைகளுக்குரிய "இலங்கை தகைமைகள் கட்டமைப்பு" மற்றும் தொழினுட்ப, வாழ்க்கை தொழிற்கல்வி, பயிற்சி நிறுவனங்களினால் வழங்கப்படும் தகைமைகளுக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட "தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமை" கட்டமைப்பு எனபனவாகும். ஆயினும், இதுவரை தேசிய வாழ்க்கை தொழிற்தகைமையை மாத்திரம் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சகல மாணவர்களுக்கும் சமமான விதத்தில் கல்வி திறமைகளை வெளிகாட்ட முடியாவிட்டாலும் சிலருக்கு பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டு நிபுணத்துவத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஆதலால் சில மட்டங்களில் கல்வி தகைமைகளுக்குப் பதிலாக தொழிற்தகைமைகளை ஏற்பது முக்கியமானதாகும். இதற்கமைவாக, உரிய துறைகளில் ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்காக NVQ 3 ஆம் மட்டமானது கல்வி பொதுத் தராதர (சாதாரண தரம்) பரீட்சையை சித்தியடைந்தமைக்கும் NVQ 4ஆம் மட்டமானது கல்வி பொதுத் தராதர (உயர் தரம்) பரீட்சையை சித்தியடைந்தமைக்கும் சமமானதாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.