• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தாபிக்கப்படவுள்ள வைத்தியசாலைக்கு முன்னரான அவசர நோயாளர் வண்டி மருத்துவ சேவையின் அவசர அழைப்பு நிலையத்துக்காக கட்டணமற்ற தொலைபேசி இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- இலங்கையில் நிகழும் அவசர மருத்துவமனைகளுக்கான அனுமதிப்புகள் மற்றும் வைத்தியசாலைகளில் நிகழும் மரணங்களில் கணிசமான அளவு திடீர் விபத்துக்கள் மற்றும் அவசர நோய் நிலைமைகள் என்பன காரணமாக நிகழ்வதோடு, அத்தகைய நிலைமைகளுக்கு கூடுதலாக ஆளாவது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளோடு இணைந்து செயலாற்றும் மக்களாவர். அத்தகைய அவசர சந்தர்ப்பங்களில் குறுகிய காலத்திற்குள் துரிதமாக சிகிச்சை வழங்குவதன் மூலம் கடுமையான உட்சிக்கல் நிலைமைகள் ஏற்படுதல், முழுமையான இயலாமைக்கு ஆளாதல் உட்பட மரணமடைதல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள முடியும். அதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, இந்தியாவின் GVK EMRI நிறுவனத்துடன் இணைந்து வைத்தியசாலைக்கு முன்னரான அவசர நோயாளர் வண்டி மருத்துவ சேவையொன்றை இலங்கையில் தாபிக்கவுள்ளது. அவசர நிலைமைகளின் போது இந்த நோயாளர் வண்டி மருத்துவ சேவையுடன் இணைவதற்காக அவசர அழைப்பு நிலையமொன்று தாபிக்கப்பட வேண்டுமென்பதோடு, அதற்காக இலகுவில் நினைவில் நிறுத்திக் கொள்ளக் கூடிய கட்டணமற்ற தொலைபேசி இலக்கமொன்றை குறித்தொதுக்குவது முக்கியமானதாகும். இதற்கமைவாக, அவசர அழைப்பு நிலையத்துக்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள "1990” என்னும் குறுகிய அழைப்பு இலக்கத்தை முழுமையாக கட்டணமற்ற இலக்கமொன்றாக செயற்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.