• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சமூக பாதுகாப்பு சபை சட்டத்தை திருத்துதல்
- சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களைத் தாபித்து நடைமுறைப்படுத்துவது 1996 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சமூக பாதுக்காப்பு சட்டத்தினால் தாபிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு சபையின் பிரதான நடவடிக்கையாகும். இதற்கமைவாக இந்த சபையினால் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுவதோடு, 18 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த திட்டங்களில் பங்களிப்புச் செய்யலாம். 2016‑03‑31 ஆம் திகதியன்று அத்தகைய சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பங்களிப்பு வழங்கியிருந்த மொத்த எண்ணிக்கை 497,102 ஆக இருந்ததோடு, மாதாந்தம் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை 22,973 ஆகும். இலங்கை சனத்தொகையின் வயது கட்டமைப்பு மற்றும் சமூக, பொருளாதார விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு மேலதிகமாக தனியார்துறையில் சேவை புரிகின்றவர்களையும் தொழில்சார்பாளர்களையும் கலைஞர்களையும் உள்நாட்டு வைத்தியர்களையும் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களையும் கமத்தொழில் மற்றும் கடற்றொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் இந்த திட்டங்களில் பங்குபெறச் செய்வித்து பயனாளிகளை அதிகரிப்பதற்கும் திட்டங்களில் உறுப்புரிமை மற்று நலன்கள் கிடைக்கக்கூடிய வயதெல்லையைத் திருத்துவதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை சட்டத்தை திருத்தும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.