• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சைப்பிரஸ், நிக்கோஷியாவில் இலங்கை கொன்சுலேட் நாயகம் அலுவலகமொன்றை நிறுவுதல்
- இலங்கைக்கும் சைப்பிரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1963 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதோடு, ரோமாபுரியிலுள்ள இலங்கை தூதுவர் சைப்பரஸ் சம்பந்தமாகவும் செயலாற்றுவதற்கு நியமிக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாக சைப்பிரஸில் அத்தியாவசிய கொன்சியுலர் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் சம்பந்தமாக செயலாற்றும் இலங்கைக்காக ஊதியமற்ற கொன்சியுலர் ஒருவரும் உள்ளார். சைப்பிரஸில் தற்போது சேவைபுரிந்து கொண்டிருக்கும் 20,000 - 25,000 இடைப்பட்ட இலங்கையைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனோம்பல் தேவைகளை உறுதி செய்தல் அதேபோன்று தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக நிகோசியாவில் தொழில் ரீதியிலான கொன்சுலேட் நாயகம் அலுவலகமொன்றை தாபிக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, வர்த்தக, முதலீட்டு, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அதேபோன்று சைப்பிரஸில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோம்பல் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் சைப்பிரஸ் நிக்கோஷியா நகரத்தில் இலங்கை கொன்சுலேட் நாயகம் அலுவலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.